சென்ற வாரம் திரைக்கு வந்த சூரரைப்போற்று திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாகவும் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாகவும், மேலும் கருணாஸ், ஊர்வசி, விவேக் பிரசன்னா, காளி வெங்கட் ,கிருஷ்ணகுமார் பாலசுப்பிரமணியம் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அமேசான் தளத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளிவரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணத்தினால் திரையரங்குகள் திறக்கப்படாததால் அமேசான் தளத்தில் விற்கப்பட்டு வெளியிடப்பட்டது. இவ்வாறு வெளியானதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை அளித்தாலும் புதிய திரைப்படம் திரைக்கு வரப்போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தனர். இதற்கு முன்னால் அமேசான் தளத்தில் இல்லாத ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் சர்வர் திணறி விட்டது. இதற்கு முன் ஹாலிவுட் திரைப்படங்கள் அமேசானில் திரையிடப்பட்ட போது கூட இப்பேர்பட்ட வரவேற்பு இல்லையாம்.
சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியிடப்பட்டதால் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாம். சூரரைப் போற்று திரைப்படத்தின் மூலம் அதிக லாபம் பெற்றுள்ளதாம் அமேசான் தளம். இதேபோல் விஜய் நடித்திருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படமும் அமேசான் தளத்தில் வெளியாகும் என அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment