விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த டீசர் விஜய் ரசிகர்கள் மத்தியில் மாஸான வரவேற்ப்பை பெற்றுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணி அளவில் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிகை மாளவிகா மோகனன் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார்.
அர்ஜுன் தாஸ் அறிமுகமான முதல் தமிழ் படம் கைதி, அறிமுகமான முதல் படத்திலேயே மிரட்டலான வில்லனாக நடித்து இருப்பார்.
அந்த படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து இவருக்கு மாஸ்டர் பட வாய்ப்பு கிடைத்தது. கைதி படத்தைப்போலவே மாஸ்டர் திரைப்படத்திலும் மிரட்டலான வில்லனாக நடித்து இருப்பார் என்று ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
Post a Comment