டாக்டர் கனவை தனது நான்காவது முயற்சியில் வெற்றி கண்ட பெரம்பலூர் மாணவி

 


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேராலி கிராமம் தான் இவரின் சொந்த ஊர் தாயும் தந்தையும் கூலித்தொழிலாளர்கள் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அல்லல்பட்டது. ராதாவின் குடும்ப வாழ்வில் புயல் வீசிக் கொண்டிருந்த போதிலும் விடாமுயற்சியுடன் படித்தார். 2016ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று பிஸியோதெரபி படிப்பில் சேர்ந்த அவர் பொருளாதார நெருக்கடியால் அந்தப் படிப்பையும் தொடர முடியாமல் போனது. இந்நிலையில் பழனிவேல் என்ற ஹோமியோபதி மருத்துவருக்கு ராதாவை திருமணம் முடித்து வைத்தனர்.  கல்விக் கனவு கலைந்தது எண்ணி வருத்தத்தில் இருந்த ராதாவின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைத்தார் கணவர் பழனி. தம்பி மணிகண்டன் உடன் சேர்ந்து தேர்வுக்கு தயாரானார் ராதா நான்காவது முயற்சியில் 282 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார் அதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் சிறப்பு வகுப்புகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே படித்தார் என்பது தான். 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் அவருக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்திருக்கிறது.


அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வு எழுதிய போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராதா இப்போது குழந்தையுடன் மருத்துவ படிப்புக்கான ஆணையைப் பெற்ற போது மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார். அவரின் சகோதரர் மணிகண்டனுக்கு திருச்சி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்து இருப்பதால் பேராலி கிராமத்திற்கே இரட்டிப்பு சந்தோஷமாக இருக்கிறது. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்திருக்கிறார் ராதா.


Post a Comment