இந்த வருடம் தமிழ் திரை உலகில் வடிவேல் பாலாஜி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் போன்றோரை தொடர்ந்து நகைச்சுவை நடிகர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் நடித்த தவசி அவர்கள் காலமானார். இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு அப்பாவாக நடித்து இருந்தார். இந்நிலையில் இவர் கடந்த எட்டு மாத காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். இவர் சென்ற வாரம் தனக்கு உதவி செய்யுமாறு அனைத்து நடிகர்களிடமும் பொதுமக்களிடமும் உதவி கேட்டிருந்தார். இச்செய்தியை அறிந்த மதுரையை சேர்ந்த மருத்துவர் சரவணன் என்பவர் அவரை தன் சொந்த மருத்துவமனையில் சிகிச்சை கொடுத்து வந்திருந்தார். இந்நிலையில் இன்று இரவு 8:15 மணிக்கு தவசி அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார்.
Post a Comment