
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த தவசி ஐயாவுக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் படத்தில் கோவில் பூசாரி ஆகவும் பரோட்டா சூரிக்கு அப்பாவாக நடித்து இருந்தார். இந்தத் திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யா மற்றும் சத்யராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் இவர் பேசிய 'கருப்பன் குசும்புக்காரன்' என்ற வசனம் மிகவும் பிரபலம் மேலும் இவர் கிழக்குசீமை படத்திலிருந்து அண்ணாத்த வரை நடித்திருக்கிறார்.

இவர் தற்போது மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். அவர் மெலிந்த உடலுடன் மொட்டையடித்து மிகவும் பரிதாப நிலையில் காணப்படுகிறார்.

மேலும் நடிகர்களும் பொதுமக்களும் தனக்கு மருத்துவ உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளார். அனைவருக்கும் அவருடைய மகனும் தன் தந்தையுடைய மருத்துவ செலவிற்கு உதவுமாறு நடிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அவரை தொடர்பு கொள்ள கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
To help Actor Davasi MKR .
contact: 9659662482 👈
Post a Comment