சிவகார்த்திகேயன் உதவியால் ஏழை மாணவி டாக்டர் கனவு நனவாகியது..!!!

 


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ளது, பூக்கொல்லை என்ற கிராமம் அதில் வசித்து வரும் தையல் தொழிலாளி இரண்டாவது மகள்தான் சஹானா கடந்த வருடம் நடந்த அரசு பொதுத்தேர்வில் 524 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். ஆனாலும் நீட் தேர்வில் சஹானாவின் மதிப்பெண் போதுமானதாக இல்லை, இதனால் தகவல் தெரிந்த நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய நீட் தேர்வு பயிற்சிக்கான தொகையை கொடுத்துள்ளார். இதன் மூலம் சஹானா நீட் தேர்வில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல்,  இப்போது திருச்சியில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படிப்பதற்கு இடம் கிடைத்து இருக்கிறது. 


இதனால் மாணவி சஹானா மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் சிவகார்த்திகேயனுக்கு  நன்றி தெரிவித்துள்ளனர்.  இதனையடுத்து ஏழரை சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். சிவகார்த்திகேயன் செய்த பெரிய உதவியால் ஏழை மாணவியின் டாக்டர் கனவு நனவாகியுள்ளது.

Post a Comment